search icon
என் மலர்tooltip icon
    • இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடக்குமா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா -பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு உள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
    • இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

    மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

    சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் நேரில் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    • குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கிடையே நடந்து வருகிறது. இதுவரை விடாமுயற்சி படத்தைக் குறித்து பெரிய அளவிளான எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். இது ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடையச் செய்தது.

     

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படம் தாராமானதாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.

     

    இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தில் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.
    • இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோசடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ்  நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

    அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின.

    இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 3 ஆவது வாரத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
    • கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை.

    உலகளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது பெரிய பொளுதார சக்தியாக விளங்குகிறது என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது இருந்தது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் நாட்டின் ஜி.டி.பி. (GDP) கணக்கெடுப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    "ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஜி.டி.பி. மற்றும் துறைவாரியான வளர்ச்சி விகிதத்தில் முரண்பாடுகள் உள்ளன. தற்போதைய நிதியாண்டில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு மதிப்பற்ற ஒன்றாக இருப்பதாக நீங்கள் சொல்வது சரியானது தான். நானும் இன்று அப்படியே உணர்கிறேன். உண்மையில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை."

    "தற்போது பேசப்படும் ஜி.டி.பி. கணக்கெடுப்பு துறைவாரியாக ஒற்றுப் போகவில்லை. குறிப்பாக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பில் அதிக முரண்கள் உள்ளன. ஸ்டீல், சிமென்ட் என முக்கியமான துறைகளின் உண்மையான ஜி.டி.பி. ஒட்டுமொத்த ஜி.டி.பி.யின் வளர்ச்சியில் எங்கும் ஒற்றுப்போகவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

    ஏசியன் பெயின்ட்ஸ் அதிகாரியின் கருத்தை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் கட்சி, "ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற தகவல் போலி ஜி.டி.பி. தரவுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளதா? அனைவரும் கூறிக் கொண்டு இருந்ததை ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் உறுதிப்படுத்திவிட்டார்."

    "அவர் ஜி.டி.பி. கணக்கெடுப்புக்கும் துறைவாரியான வளர்ச்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஜி.டி.பி. கணக்கெடுப்பில் மிகப்பெரிய அளவில் முரண்பாடு இருப்பதாக தெரித்துள்ளார். இந்த தகவல்களை அவர் மே 9 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்," என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.  

    • சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
    • வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில்,

    * தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    * இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

    * சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

    * மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

    * வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    * பொது சுகாதாரத்துறைக்கு மாவட்ட வாரியாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    * காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு, தனியார் மருத்துவமனைகளிடமிருந்து பெற வேண்டும்.

    * உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * தினசரி செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
    • இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.

    கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது

    இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஷியாவின் பல்வேறு இடங்களை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகள் தாக்குதல்.
    • ஏவுகணைகளுடன் டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்து வருகிறது.

    தற்போது தரைவழி தாக்குதல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், வான்தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரோன்கள் மூலம் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதனால் இருதரப்பும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைனால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியாவில் உள்ள சுத்தரிக்கு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது

    இந்த நிலையில் இன்று ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை நோக்கி உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளத.

    கிரிமியா பகுதியில் கருங்கடல் பகுதியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

    கருங்கடலுக்கு மேற்பகுதியிலும், பெல்பெக் விமானப்படை தளத்திற்கு அருகிலும் உக்ரைனின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சுடடு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் உதிரிகள் வீடுகள் மீது விழுந்தன. ஆனால், இதன் காரணமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என் செவாஸ்டாபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜயேவ் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் 9 உக்ரைன் டிரோன்கள், இரண்டு வில்ஹா ராக்கெட், இரண்டு ரேடார் எதிர்ப்பு HARM ஏவுகணைகள் பொல்கோரோட் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏவுகணைகள் வீடுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    அத்துடன் குர்ஸ்க் மாகாணத்தில் ஐந்து உக்ரைன் டிரோன்கள், பிரியன்ஸ்க் மாகாணத்தில் மூன்று டிரோன்கள் ஆகியவற்றையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லையில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாடார்ஸ்டான் மாகாணத்திலும் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ரஷியா 100 முதல் 125 சதுர கிலோ மீட்டர் அளவிலான உக்ரைன் பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலப்பரப்பிற்குள் ஏழு கிராமங்கள் உள்ளன. ஆனால், இந்த கிராமங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கள் இரண்டு பயணமான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலும், ரஷியாவின் பதிலடியும் நடந்துள்ளது.

    ×